Header Ads

test

வருங்கால மனைவியுடன் விஷால் ஃபோஸ் கொடுத்தார்!

'சண்டக்கோழி', 'தாமிரபரணி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நாயகனாகவும் வலம்வரத் தொடங்கிய நடிகர்  விஷால், தயாரிப்பாளராகவும் 'பாண்டியநாடு', 'ஆம்பள', 'துப்பறிவாளன்' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது நடிகர் சங்கத்தின் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
திருமணம் குறித்து பலமுறை கேள்வி எழுப்பப்பட்ட போது, நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் முடிந்து, அதில் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்து வந்தார் விஷால். நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடையும் எனத் தெரிகிறது.

இதனால், விஷாலுக்குப் பெண் பார்க்கும் பணிகளில் அவரது பெற்றோர் ஈடுபட்டு வந்தனர். தற்போது ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷாவை விஷாலுக்குத் திருமணம் செய்து வைக்க  முடிவு செய்துள்ளனர்.  
விரைவில் ஹைதராபாத்தில் விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. அன்றைய தினமே திருமணத் தேதியையும் முடிவு செய்யவுள்ளனர். இந்நிலையில் தனக்கு கல்யாணத்திற்கு முடிவு செய்யப்பட்ட ஆந்திரப் பெண் அனிஷாவுடன் ஓய்யார ஃபோஸ் கொடுத்து போட்டோ எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

No comments