Video Of Day

Breaking News

முஸ்லிம் தலைவர்களின் முடிவு இனவாதத்திற்கு அடிபணிந்ததை எடுத்துக்காட்டுகிறது – செல்வம்

முஸ்லிம் தலைவர்களின் முடிவு பௌத்த மதகுருக்களின் இனவாத செயலுக்கு அடிபணிந்ததை எடுத்துக்காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ரிஷாட் பதியுதீன் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் 9 பேர் தமது பதவிகளை இராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை)  கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களை பதவி நீக்குமாறு நாடளாவிய ரீதியில் சில தரப்புக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாறான நிலையில் தன்மீது குற்றம் இல்லையாயின், உடனடியாக பதவியிலிருந்து விலகி அதனை நிரூபித்திருக்க வேண்டும்.

அதைவிடுத்து முஸ்லிம் மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி, பௌத்த மதகுருக்களின் கைகளில் இந்த பிரச்சினையை வழங்கியது தவறு. இவ்வாறு செய்ததன் மூலம் பௌத்த மதகுருக்களின் இனவாத செயலுக்கு அடிபணிந்து சென்றதைப் போல் அமைகிறது” என மேலும் தெரிவித்தார்.

No comments