Header Ads

test

பொங்கலன்றும் குளத்தில் மூழ்கி இளைஞர்கள் சாவு?

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் இன்று பொங்கல் தினமன்று மதியம் 1.45 மணியளவில் இரு இளைஞர்கள் குளத்தினுள் தவறி வீழ்ந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.எனினும் அவர்கள் குளத்தில் நீராட முற்பட்ட போதே மூழ்கி மரணமடைந்ததாக மற்றொரு செய்தி தெரிவிக்கின்றது.



இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரப்பெரியகுளம் அருகே ஆறு இளைஞர்கள் மதிய உணவு சாப்பிட்டுள்ளார். அதன் பின்னர் கைகழுவச் சென்ற சமயத்தில் குளத்தினுள் இரு இளைஞர்கள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர் என ஒரு தகவல் தெரிவிக்கின்றது.


இதனிடையே சடலமாக மீட்கப்பட்ட இரு இளைஞர்களும் 16 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் இவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

No comments