Video Of Day

Breaking News

கூரேக்கு எதிராக மைத்திரியிடம் கோள் சொன்ன சிறீதரன்!

இரணைமடுக்குள திறப்பு விழாவிற்கு தம்மை அழைக்கவில்லையென வடமாகாண ஆளுநரிற்கு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் புகார் செய்துள்ளார். இந்த விடயத்தை அவர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி வரையில் கொண்டு சென்றிருந்தார்.

அண்மையில் புனரமைக்கப்பட்ட இரணைமடு குள அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி வருகை தந்திருந்தார்.எனினும் ரணிலிற்கு முகம் கொடுக்க அஞ்சி கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரி வருகையினை தவிர்ந்திருந்தனர்.

எனினும் கிளிநொச்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மட்டும் பொதுமக்களுடன் வேடிக்கை பார்த்து கலைந்து சென்றிருந்தார். அவருடன் அவரது உதவியாளர்களான பிரதேச சபை தலைவர்களும் நிகழ்வை எட்டிப்பார்த்திருந்தனர்.

இந்நிலையில் கொழும்பில் மைத்திரியுடனான சந்திப்பில் தமக்கு அழைப்பு அனுப்பியிருக்கவில்லையென ஆளுநருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

No comments