கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் என தொலைபேசிமூலம் முக்கிய இடத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது.
ரணிலுக்கு ஆதரவாக கைதூக்க நாளை சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு முடிவு செய்துள்ள நிலையில் அதனை தவிர்க்க நாளை குறித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருப்பதாக சொல்லப்படுகின்றது.
இதனிடையே இன்றைய நாடாளுமன்ற அமர்விலும் கலந்துக் கொள்ளாதிருக்க மஹிந்த தரப்பு தீர்மானித்திருப்பதாக சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு நாளை மறுதினம் 13ம் திகதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
14ம் திகதியுடன் நீதிமன்ற அமர்வுகளிற்கு இருவார கால விடுமுறை வழங்கப்படவுள்ளதால் அதற்கு முன்னதாக நீதிமன்ற தீர்ப்பு வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 கருத்துகள்:
Post a Comment