இலங்கை

குடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்!

ஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன்பட்ட விடயங்கள் தொடர்பில் பிரபல்யப்படுத்துவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக விசேட உரையொன்றை விடுத்துள்ள அதன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எந்தவித உடன்படிக்கையுமின்றியே ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட நடவடிக்கையை இழிவுபடுத்தும் நோக்கில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமிடையில் உடன்படிக்கை உள்ளதாக தொடர்ந்தும் குற்றம் சாட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

இவ்வாறான விடயங்கள் தொடர்ந்து இடம்பெறுமானால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடி பெற்றுத்தருவதாக கூறிய வாக்குறுதிகள் தொடர்பில் பிரபல்யப்படுத்துவோம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment