Header Ads

test

விஜயகலா பேச்சு:கொழும்பினை சென்றடைந்த மூலப்பிரதி!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் நாடாளுமன்ற உறுப்பினராக இன்றைய தினம் யாழி;ல் கொழும்பு அமைச்சர் தயா கமகே பங்கெடுத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இயலுமான வரை ஊடக வெளிச்சத்திலிருந்து அவர் விலகியிருந்தததை காணக்கூடியதாக இருந்தது.

இதனிடையே சமீபத்தில் அவர் தெரிவித்திருந்த கருத்து தொடர்பான, திருத்தப்பட்ட அல்லது திருத்தப்படாத அனைத்து பதிவுளையும், மின்னணு மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களிடமிருந்து  பெற்றுக்கொள்ளுமாறு, உத்தரவிடப்பட்டுள்ளநிலையில் பலாலி இராணுவ புலனாய்வு பிரிவின் தலைமையகம் அதனை கையளித்துள்ளது.

யாழ்.குடாநாட்டினில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளதும் ஒளிப்பதிவு பிரதிகளை முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் உரிமையாளராகவும் கொண்டுள்ள தொலைக்காட்சி பலாலி தலைமையகத்திற்கு வழங்குவது சாதாரண நடைமுறையாகும்.அதனை முன்னாள் புலிகள் அமைப்பின் உறுப்பினரான தயா மாஸ்டர் வழங்கிவருவது ஆசிரியபீடத்திடையே சர்ச்சைகளை தோற்றுவித்துமுள்ளது.இந்நிலையில் விஜயகலா ஒளிப்பதிவு நாடாவும் அதே தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடாக பலாலி சென்று கொழும்பு சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பான விசாரணைகளுக்காக, ஒழுங்குசெய்யப்பட்டுள்ள குற்றத் தடுப்பு காவல் பிரிவினருக்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க, நேற்று (06) இந்த பணிப்புரையை வழங்கினார்.

கடந்த 3ஆம் திகதி, முன்னாள் இராஜாங்க அமைச்சரால் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில், சிங்கள ராவயவின் தேசிய அமைப்பாளர் வண.மகல்கந்தே சுதந்த தேரரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, இது தொடர்புடைய பதிவுகளை, மின்னணு மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு, குற்றத்தடுப்பு பிரிவினர், நீதிமன்ற அனுமதியை நாடியிருந்தனர். இதையடுத்தே, இதற்கான அனுமதி, நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.

No comments