ஒஸ்ரினிற்கு லண்டனில் பதவி!
அமெரிக்க அரசின் தீவிர விசுவாசியாகவுள்ளவரும் இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் பதவியிலிருந்து விலகிய ஒஸ்ரின் பெர்னாண்டோவை பிரித்தானியாவுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.
பிரித்தானிய தூதுவர் பதவி தொடர்ச்சியாக வெற்றிடமாக இருக்கம்நிலையில் அந்த இடத்திற்கு ஒஸ்ரின் பெர்னாண்டோவை நியமிக்குமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு பரிந்துரை செய்திருக்கின்றார்.
சிறிலங்காவின் நிர்வாகத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட மூத்த நிர்வாக சேவை அதிகாரியான ஒஸ்ரின் பெர்னாண்டோ இதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அதேவேளை ஜனாதிபதி செயலாளர் பதவிக்கு வருவதற்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநராகவும் கடமையாற்றியிருந்தார்.
முன்னைய சந்திதரிகா ஆட்சிக்காலத்தில் 1994ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடனான சந்திப்பில் அவரும் அரச தரப்பில் கலந்து கொண்டிருந்தார்.
இதேவேளை றிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் புதியஜனாதிபதி செயலாளராக முன்னாள் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான உதய ஆர். செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்
Post a Comment