Header Ads

test

இலங்கையை விட்டு வெளியேறுகிறாரா விஜயகலா??

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டுமென கருத்து வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியதோடு, தனது இராஜாங்க அமைச்சர் பதவியையும் இராஜினாமா செய்த விஜயகலா மகேஸ்வரன் இலண்டனுக்கு பயணம் செய்யவுள்ளார்.

அவர் தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டே இலண்டன் பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புலிகள் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து தென்னிலங்கையில் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்த நிலையில், தமிழர் பிரதேசங்களில் அதற்கு ஆதரவு தெரிவித்து கருத்துகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் அவர் அரசியலிலிருந்து விலகி இலண்டனில் குடுத்துடன் தங்கக்கூடும் எனவும் செய்திகள் ஊகங்களாக வெளிவந்துள்ளன.

No comments