யாழ்.மாநகரசபை: ஜெகனிற்கும் ஆப்பு?
யாழ்.மாநகர சபையினில் தமிழரசுக்கட்சிக்கு தலையிடி கொடுப்பவர்களை விரட்டியடிக்க சுமந்திரன் ஆதரவு தரப்புக்கள் குத்தி முறியத்தொடங்கியுள்ளன.
அவ்வகையில் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலையின் முக்கிய சூத்திரதாரிகளுள் ஒருவரும் ஈ.பி.டி.பி சார்பில் யாழ்.மாநகரசபைக்கு பட்டியல் மூலம் தெரிவாகியுள்ள குகேந்திரன் (ஜெகன்) அந்தப் பதவியை வகிக்க தகுதியுள்ளவராவென்ற கேள்வி எழுந்துள்ளது.
இலண்டன் குடியுரிமையுள்ளவரென அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஜெகன் முன்னர் ஈபிடிபி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தார்.பின்னர் புலிகளது புலனாய்வு பிரிவினருடனான ரகசிய பேரத்தையடுத்து விலகி குடும்பத்தினருடன் லண்டன் சென்று வாழ்ந்து வந்திருந்தார்.
யுத்த முடிவின் பின்னர் டக்ளஸ் பேரம் பேசி லண்டனில் பெற்ற ஊதியத்தினை இங்கு வழங்குவதாக தெரிவித்து ஜெகன் அழைக்கப்பட்டிருந்தார்.டக்ளஸின் கடத்தல்கள் கொலைகளது நேரடி சாட்சியம் வெளியே இருப்பதை டக்ளஸ் விரும்பியிருக்கவில்லையென சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் ஜெகனின் இரட்டை குடியுரிமையை தமிழரசு தோம்புதட்ட தொடங்கியுள்ளது.
எனினும் இலங்கையின் அரசியல் யாப்பில் கொண்டு வரப்பட்ட மாற்றத்திற்கு அமைவாக ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட விரும்புபவர்களுக்கே அவ்வாறானதொரு சட்ட திருத்தத்தின் கீழ் போட்டியிட முடியாத ஓர் சூழ்நிலை இலங்கையில் காணப்படுகிறது. இந்தச் சட்டமானது, பிரதேச சபைகளுக்கோ, மாகாண சபைகளுக்கோ பொருந்தாது என்று தேர்தல் திணைக்களமே பல முறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. காழ்ப்புணர்ச்சியுடனும், ஈ.பி.டி.பியின் அரசியல் பிரதிநிதித்துவத்தை தகர்க்கும் நோக்குடனும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே டக்கிளசின் பிரதிநிதியென்று கூறிக்கொண்டு தீவகத்திலுள்ள பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் கலந்துகொண்டு குழப்பமான கருத்துக்களை கூறி கூட்டங்களை குழப்பிவருவதாக ஜெகன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தீவகத்திலுள்ள பதியப்பட்ட அமைப்புக்கள் , முன்ணணி செயற்பாட்டாளர்கள் , சமூக அமைப்புக்களின் பிரநிதிகளுக்கு அழைப்பு விடுக்காத பிரதேச செயலாளர்கள் தீவகத்திற்கு சம்பந்தமற்ற சாதாரண யாழ் மாநகர போனஸ் உறுப்பினருக்கு அழைப்பு விடுத்து முக்கிய விருந்தினர் ஆசனத்தில் அமரவிடுவதேன் என கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment