Header Ads

test

ஜப்பானில் கடும் மழை! வெள்ள அனர்த்தம் காரணமாக 100-க்கு மேற்பட்டோர் பலி!

ஜப்பானில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழை காரணமாக ஆறுகளில் மிகப்பொிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள அனர்த்தம் காரணமாக வெள்ளத்தில் மூழ்கியும் நிலச்சரிவில் சிக்கியும் 100-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கு மேற்பட்டோரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 

மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மகிழுந்துகள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கின்றன. வீடுகள் மூழ்கியதால் மக்கள் கூரைகளில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் படைவீரர்கள் படகுகள் மற்றும் உலங்குவானூர்த்திகள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசங்களிலிருந்து அனர்த்தம் காரணமாக 50 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.


No comments