Header Ads

test

கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் சேகரித்த பண மூடைக்குள் 6 ஆயிரத்து 37 ரூபா!

தவராசாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள்  சேகரித்த பண மூடை எனக் கருதப்பட்ட பொதியில் 6 ஆயிரத்து 37 ரூபா பணம் மட்டுமே இருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மே.18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவினை கடந்த 3 ஆண்டுகளாக வடக்கு மாகாண சபை நடாத்தி வந்த நிலையில் இந்த ஆண்டின் நிதிச் செலவிற்காக பல மாகாண சபை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தலா 7 ஆயிரம் ரூபா வீதம் மாகாண சபையினால் அறவிடப்பட்டது.

இருப்பினும் 18 முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வினை வடக்கு மாகாண சபை நடாத்தவில்லை என்பதன் பெயரில்  தன்னிடம் இருந்து அறவிடப்பட்ட பணத்தினை வடக்கு மாகாண சபை மீளச் செலுத்த வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா அவைத் தலைவரை கோரியிருந்தார்.

இந்த நிலையில் குறித்த நிதியை வழங்கவென கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் உண்டியல் மூலம் நிதி சேகரித்து அதனை வழங்க மாகாண சபைக்கு கொண்டு சென்ற சமயம் எதிர்க் கட்சித் தலைவர் சபையின் வெளியே பிரசன்னமாகவில்லை. குறித்த பணத்தினை அவைத் தலைவர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் கையேற்க மறுப்புத் தெரிவித்திருந்தனர்.

இதேநேரம் எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் காவல் கடமையில் இருந்த பொலிசார் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலின் பிரகாரம் இல்ல வாசலில் இருந்து ஓர் பொதியை மீட்டுச் சென்றனர். அப்பொதியை ஆராய்ந்தபோது அதனுள் சில்லறைப் பணம் இருக்க கானப்பட்டது. இதனால் குறித்த பொதி மாணவர்கள் சேகரித்த பணமாக இருக்கலாம் எனக் கருதப.படுகின்றது. இதேநேரம்  குறித்த பொதியை கணக்கிட்ட பொலிசார் அப் பொதியில் 6 ஆயிரத்து 37 ரூபா மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments