தாயகம் திரும்பிய அகதிகளின் பிள்ளைகளை புறக்கணிக்கும் அதிபர்கள்!
போர்க்காலத்தில் பாதுகாப்பு கருதி, வடக்கில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து,சென்று, மீண்டும் வடக்கில், குடியமர்ந்த மக்கள் பல்வேறு வழிகளில் புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. |
இது குறித்து, இந்தியாவிலிருந்து வடக்கில் மீள்குடியமர்ந்த மக்கள் கூறியதாவது, பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நாம், குறிப்பாக, பிள்ளைகள் தொடர்பாகவே, அதிகமான நெருக்கடிகளுக்குள்ளாகி வருகிறோம். மது பிள்ளைகளை வடக்கிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்பதற்காக அனுமதிப்பதற்காக முயல்கின்றபோது, பாடசாலை அதிபர்கள், அந்நாட்டு பிறப்புச் சான்றிதழை காரணம் காட்டி, எமது பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கான அனுமதியை மறுத்து வருகின்றனர் என, தெரிவித்துள்ளனர் |
Post a Comment