கோத்தா ஜனாதிபதியானால் நாட்டைவிட்டு ஓடிவிடுவேன் - மேர்வின் சில்வா
2020இல் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சிறிலங்காவின் ஜனாதிபதியானால், தான் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“ மகிந்த ஆட்சிக்காலத்தில், வெள்ளை வான் கலாசாரத்தை உருவாக்கியவர் கோத்தாபய ராஜபக்ச தான். அந்தக் காலகட்டத்தில் மக்கள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டனர். கொலை செய்யப்பட்டனர்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், பசில் ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும் தான் நாட்டை ஆட்சி செய்தார்கள்.
அப்போது நாட்டுக்கு வந்த முதலீட்டாளர்களிடம் தரகுப் பணத்தை பசில் ராஜபக்ச பெற்றுக் கொண்டார்” என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment