இலங்கை

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சனின் நினைவேந்தல்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 12ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (01) இடம்பெற்றது.

யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்கள் நினைவு தூபியில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது.

இதன்போது நினைவு தூபிக்கு மலர் மாலை அணியப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும், யாழ்,மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி அவரது வீட்டில் இருந்த வேளை, அவரது வீட்டிற்கு அதிகாலை 5 மணியளவில் சென்ற ஆயுதாரிகள் நிலக்சனை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்தனர்.

About யாழவன்

0 கருத்துகள்:

Post a Comment