கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்த விசாரணையை தொடங்கியது பிரித்தானியா!
கழிவுப்பொருட்கள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் அடங்கிய கப்பல் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கழிவுப்பொருட்கள் அடங்கிய ஒரு தொகை கொள்கலன்களில் சூழலுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுப்பொருட்கள் அடங்குவதாக இலங்கை அதிகாரிகள் கூறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 5 ஆம் திகதி சுங்க அதிகாரிகள் கொள்கலன்களை திறந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் ஊடாக, பிரித்தானியாவில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட 111 கொள்கலன்களில் கழிவுப்பொருட்கள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டது.
இதன்போது மெத்தை, தரை விரிப்பு, பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகளுடன் கலந்த “மிகவும் அபாயகரமான” பொருட்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இவ்வாறு பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் கொண்டுவரப்பட்ட போர்வையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட கழிவுகள் அபாயகரமானது என்றும் இது 2017 முதல் நடந்து வருகிறது என்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையை மேற்கோள்காட்டி ‘டெலிகிராப்’ பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.
இந்நிலையில் பிரித்தானியாவின் மனித உடற்பாகங்கள் இந்தக் கொள்கலன்களில் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டால், ஏற்றுமதி செய்த நபர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையோ அல்லது வரம்பற்ற அபராதத்தையோ சந்திக்க நேரிடும் என செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார் என்றும் டெலிகிராப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது
Post a Comment