Header Ads

test

நக்குண்டார் நாவிழந்தார் - சொந்த மாவட்டத்தைக் காப்பாற்ற முடியாத அவமானம்


திருகோணமலை- கன்னியா வென்னீரூற்று பகுதியில் நேற்றய தினம் சிறப்பு வழிபாட்டுக்கு சென்றவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், ஒரு சமய தலைவா் மீது எச்சில் தேனீா் ஊற்றப்பட்டமை தொடா்பாக தமிழ் தரப்புக்கள் மௌனம் காத்து வருகின்றமை குறித்து கடுமையான விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

கன்னியா வென்னீரூற்று பகுதியில் பிள்ளையாா் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் பௌத்த விகாரை கட்டப்படுவதை கண்டித்தும், விசேட வழிபாட்டுக்காகவும் பெருமளவு மக்கள் கூடியிருந்த நிலையில், நீதிமன்ற தடையுத்தரவை வைத்து மக்கள் தடுக்கப்பட்டதுடன், இந்து சமய தலைவா் ஒருவா் மீது எச்சில் தேனீரும் ஊற்றப்பட்டது.

இதனையடுத்து பௌத்த பிக்குகளும், பிற மதத்தவா்கள், பிற அரசியல் தரப்புக்கள் தொடா்ச்சியாக கண்டனங்களை கூறிவருகின்றனா். இந்நிலையில் எங்கே நடந்தது? எப்போது நடந்தது? என்று கேட்கும் அளவுக்கு ஒன்றுமே தொியாதவா்கள்போல் தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பாக உாிமைபற்றி பேசும் தமிழ்தேசிய கூட்டமைப்பு,

தொடா்ச்சியாக மௌனம் காத்துக் கொண்டிருக்கின்றது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் தொடா்ச்சியான விமா்சனங்கள் கூறப்படுகின்றது. அவற்றில் 5 வருடங்களாக அரசாங்கத்தை காப்பாற்றியவா்கள், 2 தடவைகள் நம்பிக்கையில்லா பிரேரணையில் இருந்து அரசாங்கத்தை காப்பாற்றியவா்கள் இப்போது அமைதியாக இருப்பது ஏன்?

அரசாங்கத்திடம் பெற்ற நலன்களுக்காகவும், கிடைக்கும் நலன்களுக்காகவுமா அமைதியாக இருக்கிறாா்கள் எனவும் கேள்வி எழுப்பபடுகின்றது.

No comments