இலங்கை

வயோதிபரை மோதிய அதிரடிப்படை வாகனம்! - பொலிஸ் வரமுன்னர் பறந்தது

வவுனியா ரயில் நிலைய வீதியில் இன்று காலை 11.30 மணியளவில் விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி ஒருவர் படுகாயமடைந்தார். 


ரயில் நிலைய வீதியில் இலங்கை வங்கி அருகே விசேட அதிரடிப்படையினரின் வாகனம் வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற முதியவர் காயமடைந்த நிலையில் முச்சக்கரவண்டி மூலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 


சம்பவ இடத்திற்கு போக்குவரத்து பொலிஸார் வர முன்னர் விசேட அதிரடிப்படையினர் விபத்துக்குள்ளான அவர்களது வாகனத்தை எடுத்துக் கொண்டு அவ்விடத்தினை விட்டு சென்று விட்டனர்

About வாதவூர் டிஷாந்த்

0 கருத்துகள்:

Post a Comment