Video Of Day

Breaking News

சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க இராணுவ நிபுணர்கள் திருகோணமலையில் பயிற்சி

சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு படையைச் சேர்ந்த வான்வழி தரையிறக்க அணியினால் திருகோணமலையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.


பலன்ஸ் ஸ்ரைல் 2019/01 திட்டத்தின் கீழ், கூட்டு  ஒருங்கிணைந்த பரிமாற்ற பயிற்சி என்ற பெயரில் இந்த பயிற்சிகள் கடந்த 13ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டன.
சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படகு அணியைச் சேர்ந்த 24 பேர் மற்றும், 4 ஆவது அதிவேக தாக்குதல் அணியைச் சேர்ந்த 12 பேர் என மொத்தம் 36 சிறிலங்கா கடற்படையினர் இந்தப் பயிற்சிகளில் பங்கேற்றுள்ளனர்.
இவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, அமெரிக்க இராணுவத்தின் 19 ஆவது சிறப்பு படையைச் சேர்ந்த வான்வழி தரையிறக்க அணியின் 10 பயிற்சி நிபுணர்கள் திருகோணமலைக்கு வந்துள்ளனர்.
மூன்று வாரங்களுக்கு நீடிக்கவுள்ள இந்தப் பயிற்சி, ஜூலை 05ஆம் நாள் நிறைவடையவுள்ளது.

No comments