யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் சி.சிறீசற்குணராசாவை நியமிப்பதற்குப் பரிந்துரைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக வாழ்நாள் பேராசிரியர் க.கந்தசாமி, உயர் கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் பல்கலைக்கழக நிர்வாகத்தை வினைத்திறனாக முன்னெடுக்கும் வகையில் பிரதித் துணைவேந்தர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.முன்னாள் விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் சி.சிறீசற்குணராசாவை பிரதித் துணைவேந்தராக நியமிக்க தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி தீர்மானித்துள்ளார் .
அவர் தனது பரிந்துரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 கருத்துகள்:
Post a comment