Header Ads

test

காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை மூடியது பாகிஸ்தான்!

காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அரசு  மூடியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி கோட்லி, நிகியல் பகுதியல் உள்ள லஷ்கர் இ தொய்பா முகாம்கள், பாலா மற்றும் பாக் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்க முகாம்கள், கோட்லி ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் ஒரு முகாம் ஆகியவை இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி காஷ்மீரின் முசாபராபாத் மற்றும் கோட்லி பகுதியில், தலா 5 பயங்கரவாத முகாம்களும், பர்னாலா பகுதியில் ஒரு முகாமும் என மொத்தமாக 11 முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீரில் இடம்பெற்ற புல்வாமா தாக்குதல்களை அடுத்து பாகிஸ்தானில் செயற்படும் பயங்கரவாத முகாம்களை அழிக்குமாறு  இந்தியா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளும் வலியுறுத்தியிருந்தன.
இதன்காரணமாக குறித்த பகுதியில் செயற்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை மூடியுள்ளதாக கூறப்படுகிறது.

No comments