Header Ads

test

சுதந்திரபுரம் படுகொலை – 21ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

முல்லைத்தீவு, சுதந்திரபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையிலான 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 1998 ஆம் ஆண்டு இலங்கை விமான படையாலும், இராணுவத்தினராலும் மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதலில் 33 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையிலேயே 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) சுதந்திரபுரம் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த தாக்குதலின் போது தமது குடும்பத்தில் 4 பேரை இழந்த தயார் மற்றும் தந்தை இணைந்து ஈகைச் சுடரினை ஏற்றி வைத்துள்ளனர். இந்த நிகழ்வில் பொதுமக்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
1998 ஆம் ஆண்டு யூன் 10 ஆம் திகதி பொதுமக்கள் மீதான வெறியாட்டம் ஒன்றினை இலங்கை தரைப்படைகள் மற்றும் விமானப்படையினர் நிகழ்த்தியிருந்தனர். இதில் 33 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார்கட்டுக்கும் வள்ளிபுனத்திற்கும் இடைப்பட்ட பிரதேசமே சுதந்திரபுரம் ஆகும். இக்கிராமம் 2009 இறுதி யுத்த காலப்பகுதியில் பெருமளவான மக்கள் எறிகணைத் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

No comments