Video Of Day

Breaking News

மாலியில் கிராமத்திற்குள் புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு – 100 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

மத்திய மாலியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் டாங் இன குழுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல் சங்கா நகருக்கு அருகே சோபலே கோவ் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர்களின் சிலரின் சடலங்கள் எரிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலரின் உடல்களை தேடி வருவதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சமீபகாலங்களாக மாலியில் ஏராளமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.  இந்த தாக்குதல் சம்பவங்களில் பெரும்பாலானவை ஜிஹாதி குழுக்களால் நடத்தப்பட்டுள்ளது.
அதே பகுதியில் இந்தவருடம் மார்ச் மாதம் ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 130 க்கும் மேற்பட்ட ஃபுலானி கிராமவாசிகள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments