Header Ads

test

பம்பைமடுவில் குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி மரணம்!

வவுனியா- பம்பைமடுவில் இன்று மதியம் கல் குவாரியில் தேங்கியிருந்த நீரில் குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 

பம்பைமடு இராணுவ முகாமுக்குப் பின்புறமாகவுள்ள பகுதியில் முன்னர் கல்லுடைக்கும் குவாரி இருந்தது. 


அந்தக் குழி மூடப்படாமையால் அதில் நீர் தேங்கியிருந்தது.

அதில், 15வயது மற்றும் 18 வயதுடைய மாணவர்கள் இருவர் குளிப்பதற்காக இறங்கிய போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இது குறித்து பம்பைமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments