Video Of Day

Breaking News

கூட்டமைப்பு தலைவர்களை புதுடெல்லிக்கு வருமாறு மோடி அழைப்பு!

விரிவான பேச்சுக்களை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை புதுடெல்லிக்கு வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
  
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.


இந்த சந்திப்பின் போது இரா.சம்பந்தன், நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது தடவையாக வெற்றிபெற்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் புதிய அரசியலமைப்பை உள்ளடக்கிய பல்வேறு முக்கிய பிரச்சினைகள் 13 வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரதமர் மோடியிடம் கூட்டமைப்பினால் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயங்கள் குறித்து விரிவான பேச்சுக்களை நடத்து விரைவில் புதுடெல்லி வருமாறு கூட்டமைப்பு தலைவர்களுக்கு இந்தியப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் ,சித்தார்த்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments