வாதரவத்தையில் சாதனை மாணவர்களை கௌரவிப்பு!
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்ஷையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் வாதரவத்தை பொதுநோக்கு மண்டபத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இன்று காலை 10 மணியளவில் உதவும்கரங்கள் சமூக சேவை அமையத்தின் செயலாளர் சி.பத்மதாசன் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்/பாதுகாவலர்கள் ஊர்வலமாக மங்கல வாத்தியங்கள் இசைக்க நிகழ்வு இடம்பெறும் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர் , தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது , தொடர்ந்து வரவேற்புரையினை நா.ஸ்ரீபகவான் அவர்களும் தலைமை உரையினை கோகுலன் அவர்களும் ,பிரதம விருந்தினர் உரையினை ஆவரங்கால் குகன் கல்வி நிலைய உரிமையாளர் குகதாசன் அவர்களும் , கிராம அலுவலர் குகதாசன் அவர்களும் ,சமுர்த்தி உத்தியோகத்தோர் மதனகோபி அவர்களும் சமூக செயற்பாட்டாளர் உமாகாரன் அவர்களும் நிகழ்த்தினர்.
தொடர்ந்து சாதனை மாணவர்களுக்கான பதக்கங்களை அணிவித்து பரிசில்களையும் வழங்கி கௌரவித்தனர்.
இதில் வாதரவத்தை விக்கினேஸ்வரா வித்தியாலய சாதனை மாணவர்களும் ,பெற்றோர்களும் நலன் விரும்பிகளும் கலந்துகொண்டனர்
Post a Comment