Header Ads

test

நீங்காத நினைவலைகளில் எங்கள் கிளி பாதர்! ஜெ.டிஷாந்த்

வன்னி மக்கள் அனைவராலும் கிளி பாதர் என செல்லமாக அழைக்கப்படும் கருணாரட்ணம் அடிகளார் மல்லாவி வவுனிக்குளம் , வன்னிவிளாங்குளம் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டு இன்றுடன் (20.04.2008) 11 வருடங்கள் நிறைவடைகிறது

மிகுந்த வேதனை ஒருபுறம் இருந்தாலும் அவரின் பணிகளை நினைக்கும் பொது அவற்றை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய சூழலில் நாம் இன்று இருக்கிறோம் அவர் ஒரு பங்கு தந்தையாக குறிப்பிட்ட கிறிஸ்தவ மக்களுக்கு மட்டும் அல்ல வன்னி மக்களின் ஒட்டு மொத்த தந்தையாகவும் காத்து நின்றார் அத்துடன் மண்ணின் விடுதலைக்கும் மக்களின் விடுதலைக்கும் மிகப்பெரும் பங்காற்றினார்

போர் நெருக்கடி மிக்க காலத்தில் குறிப்பாக 1995,1996,(1997) ஜெயசிக்குறு காலப்பகுதிகளில் மிகக்கடுமையாக இரவு பகலாக பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் மக்களின் துன்ப துயரங்களை வெளி உலகிற்கு கொண்டு வருவதற்கும் நன்கு கடுமையாக உழைத்தார் 1995ம் ஆண்டில் இரணைமாதா நகர் பகுதியில் அவரது பங்கு இருந்த போதும் அவர் இடம்பெயர்ந்த மக்களிற்காக தன்னை ஆழமாக அர்ப்பணிப்போடு ஈடுபடுத்தினார். போரினால் ஏற்பட்ட துன்பங்களையும் வடுக்களையும் ஆற்றுவதற்கு பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுடன் சர்வதேச நிறுவனங்களை நாடினர்

இக்காலத்தில் தான் வெரித்தாஸ் தமிழ் பணிக்கு வடபகுதி தொடர்பாளராகவும் பணியாற்றி மக்களின் துன்ப துயரங்களை வெளி உலகிக்கும் கிறிஸ்தவ மக்களுக்கும் தெரியப்படுத்தினார் 1998 ல் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய தலைவராக இருந்து மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்கினார் 1997,1998 காலப்பகுதியில் மல்லாவியில் பங்கு தந்தையாக இருந்தார்

வவுனிக்குளம் தேவாலயத்திலும் மல்லாவி பங்கிலும் தனது பணிகளை 2002 வரை செய்தார் அந்த தேவாலயம் பலமுறை இராணுவ தாக்குதலில் அகப்பட்டாலும் அதை விட்டு அகலாது மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட்டினர்

மனித உரிமை செயற்பாடுகள் தமிழர் தாயகத்தில் குறிப்பாக வடக்கு கிழக்கில் சுயாதீனமாக செயற்பட வட-கிழக்கு மனித உரிமை அமைப்பின் தலைமை பொறுப்பை கையேற்று மிகவும் சிறப்பாக பணியாற்றினார் சமாதான காலத்தில் வரும் இராஜ தந்திரிகளுக்கு எம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இன சுத்திகரிப்பை மிகவும் நேர்த்தியாக தெரிவித்துக்கொண்டு இருந்தார்

இறுதியாக பனியின் நிமித்தம் தனது பங்கு மக்களையும் ஆலயத்தையும் பார்க்க சென்று விட்டு திரும்பும் வழியில் ஸ்ரீலங்கா அரசின் நயவஞ்சக தாக்குதலில் மக்களை விட்டு செல்கிறார் தாக்குதலில் பலியானஎ பின்னரும் அப்போதைய அரசின் சில சிங்கள ஊடகங்கள் கிளி பாதர் அவர்களை புலி என வர்ணித்து செய்தி வெளியிடுகின்றன அப்போதைய பாதுகாப்பு அமைச்சரும் வெள்ளை உடுப்பு போட்ட புலிகளின் தலைவர் இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டார் என அறிக்கையை விட்டார்

வெள்ளை உடுப்பு போட்ட புலி என வர்ணிப்பதன் மூலம் ஸ்ரீலங்கா அரசு மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் எத்தகைய முக்கியத்துவம் பெற்றது என்பதை சொல்லாமல் சொல்லி சென்றது மனித விடுதலை போராட்டமானது தனித்து மண் விடுதலை மட்டும் இன்றி மனித சமுதாய விடுதலையின் விழுமியங்களை உள்ள்ளடக்கியதாக உள்ளது என்பதை மேற்கு உலக்கிக்கு தெரிவிப்பதில் அவர் பங்கு அளப்பரியது

சொல்லிலும் செயலிலும் எப்போதும் ஒத்த தன்மையுடன் செயற்பட்ட கிளி பாதரின் இழப்பு திருச்சபைக்கும், எமது ஈழ மக்களுக்கும்,மக்களின் விடுதலை போராட்டத்திக்கும் பேரிழப்பே! வவுனிக்குளம் தேவாலயத்திலும், மல்லாவி பங்கிலும் தனது பணிகனை 2002 ஆம் ஆண்டுவரை செய்து கொண்டிருந்தார். அந்த தேவாலயம் பலமுறை இராணுவத் தாக்குதலிற்கு உள்ளாகி இருந்தாலும் அதனை விட்டு அகலாது மக்களிற்கு நம்பிக்கையினை ஊட்டினார்.

சமாதான காலப்பகுதியில் மக்களின் பாதிப்புக்கள் அவர்களின் உரிமைகள் தொடர்பாக வெளி உலகிற்கு கொண்டு வருவதுடன் மனித உரிமைகள் தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்கும் அதன் செயற்பாடுகளை தாயகத்தில் சுதந்திரமாக செயற்படுத்துவதற்குமாக உருவாக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் அமைப்பின் தலைமைப் பொறுப்பினை இறுதியாக கையேற்று மிகவும் சிறப்பாக பணியாற்றினார்.

சமாதான காலப்பகுதியில் வருகை தந்த இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமை நிறுவனங்களிற்கும் தாயகத்தில் மனித உரிமை செயற்பாடுகள் பற்றியும் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றியும் தெரிவித்துக்கொண்டே இருந்தார். மனித விடுதலைப் போராட்டமானது தனித்து மண் விடுதலை மட்டுமன்றி ஒட்டுமொத்தமான மனித சமுதாய விடுலையின் விழுமியங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது என்பதனை மேற்குலகிற்கு தெரிவிப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்புக்கள் இன்றியமையாதனவாக இருந்தன. சொல்லிலும், செயலிலும் எப்போதுமே ஒத்த தன்மையுடன் செயற்பட்ட அருட்தந்தையின் இழப்பு எமக்கும் திருச்சபைக்கும் எமது தமிழ்ச் சமுதரயத்திற்கும் பேரிழப்பாகும். அவரின் செயற்பாடுகளை எமக்கு பாடமாகக்கொண்டு அவரது பணிகளையும் சேர்த்து நாமெல்லோரும் முன்னெடுப்போம். சுதந்திரமாகச் செயற்பட்ட உள்ளூர் மனித உரிமைக் காண்காணிப்பு அமைப்பான வடக்குக் கிழக்கு மனித உரிமைச் செயலகம் என்ற ஒன்றைத் தோற்றுவித்த கருணாரத்தினம் அடிகளால் அதன் பணிப்பாளராகச் செயற்பட்டார்.

கடந்த 30 ஆண்டுகாலப் போரின் போது கத்தோலிக்க மதகுருமார் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

 1983ம் ஆண்டு கத்தோலிக்கக் அருட்சகோதரி மேரி அன்னிதா படுகொலை செய்யப்பட்டிருந்தார்

 1984ம் ஆண்டு மெதடிஸ்ட் திருச்சபையின் மதகுரு ஜோர்ச் ஜெயரத்னசிங்கமும் அவரது முஸ்லீம் சாரதியும் கொல்லப்பட்டனர்.

 1985ம் ஆண்டு மதகுரு பஸ்தியான் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 1988ம் ஆண்டு கத்தோலிக்க மதகுரு சந்திரா பெர்னாண்டோ படுகொலைசெய்யப்பட்டிருந்தார்.

 1990ம் ஆண்டு மதகுரு ஜோன் காபேட் காணாமற்போயிருந்தார்.

 1997ம் ஆண்டு மதகுரு எஸ். செல்வராசா கடத்தப்பட்டிருந்தார்.

 2006ம் ஆண்டு கத்தோலிக்க மதகுரு பாக்கியரஞ்சித் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார்;.

 2008ம் ஆண்டு பறிதொரு கிளைமோர் தாக்குதலில் கருணாரத்தினம் அடிகளால் கொல்லப்பட்டார்.

 2009ம் ஆண்டு பிரான்சிஸ் யோசப் அடிகளால் காணாமற்போயிருக்கிறார். .

சுவடியாக்கம் - காவியா ஜெகதீஸ்வரன்

No comments