Video Of Day

Breaking News

விஸ்வாசம் தான் உண்மையான பிளாக்பஸ்டர் படம் ,சர்கார் வசூலை முறியடித்துவிட்டது !

விஸ்வாசம் தான் உண்மையான பிளாக்பஸ்டர் படம் என்று எஸ்.ஜே. சினிமாஸ் நிறுவனர் வருண் கூறியுள்ளார்.

 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் பேட்ட, சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் விஸ்வாசம் ஆகிய படங்கள் ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வந்தன. இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
 
இந்நிலையில்  ஆந்திராவில் இருக்கும் எஸ்.ஜே. சினிமாஸ் திரையரங்க நிறுவனர் வருண் தனது ட்விட்டர் பக்க பதிவில், “சர்கார் பட வசூலை விஸ்வாசம் முறியடித்துவிட்டதாகவும், விரைவில் ரஜினிகாந்தின் 2.0 பட வசூலை முறியடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments