Video Of Day

Breaking News

விஸ்வாசத்தை பார்த்து அஜித் சொன்னது என்ன?

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே ஒரு இயக்குனர் ஒரே ஹீரோவை வைத்து அடுத்தடுத்து நான்கு படங்கள் இயக்கினார் என்றால் அது சிவாதான்.  


 
அஜித்துடன் கூட்டணி போட்டு அவர் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை இயக்கியுள்ளார். இதில் விஸ்வாசம் படம் வரும் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.  
 
இந்த படம் கிராமத்து பின்னணியை கொண்ட கதையாகும். மகளுக்காக தந்தை நடத்தும் போராட்டமே விஸ்வாசம் கதையாக இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. 
 
விஸ்வாசம் படம் குறித்து அண்மையில் மவுனத்தை கலைத்த சிவா. படத்தை பார்த்து அஜித் நம் இருவரும் சேர்ந்து பண்ண வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என இந்த நான்கு படங்களில் விஸ்வாசம் படம் தான் பெஸ்ட் என கூறியுள்ளார். 
 
ஏற்கனவே உற்சாகத்தில் இருக்கும் அஜித் ரசிகர்கள் இந்த செய்தியால் இன்னும் உற்சாகமாக உள்ளார்கள்.

No comments