Video Of Day

Breaking News

விஜய்யுடன் மோதும் சீமான் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமே தம்பி சிம்புதான் !

சென்னை வடபழனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த  இன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,
உண்மையிலேயே ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது அரசியலுக்கு வந்த விஜயகாந்த்தான் ஆண் மகன். ரஜினிகாந்த், கமல் எல்லாம் பேசக்கூடாது. அவர்கள் ஹீரோக்கள் அல்ல ஜீரோக்கள். என் தம்பி ஒருவர் இருக்கிறார் விஜய். சர்க்கார் படத்தில் பேசினேன் என்றால் ஆமாம் பேசினேன் என்று சொல்லவேண்டியதுதானே. உண்மையிலேயே நீ என் தம்பியா? எடப்பாடி பழனிசாமிக்கெல்லாமா பயப்படுவது. என் படத்தில் நடிக்கமாட்டாரு ஆனால் நான் பேசுவதையெல்லாம் பேசி நடிப்பாரு என் தம்பி விஜய். என்ன செய்வது என் தம்பியாக போய்விட்டார்.என்றார் நகைச்சுவையாக.

No comments