Header Ads

test

5 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தை திடுக்கிடும் பின்னணி!


குழந்தை ஹரிணியைக் கடத்தியதாக பிரகாஷ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  போலீஸார் அவரிடம் விசாரிக்கையில் நண்பருக்கு குழந்தை இல்லை என்பதால் ஹரிணியைக் கடத்தி ரூ.5 லட்சம் பணத்துக்கு விற்று விட்டதாக கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி வெங்கடேசன்  - காளியம்மா இவர்களுக்கு 2 வயதில் ஹரிணி என்ற மகள் இருந்தார். ஆனால் இரு மாதங்களுக்கு முன்பு காணாமல் போய் விட்டார்.
இதனையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதற்கு சமூக வலதளங்களில் அனைவரும் ஆதரவு அளித்தனர். பின்னர் சில நாட்களுக்கு முன்பு ஹிரிணியை மும்பை ரயில் நிலையத்தில் பார்த்ததாக ஒரு தகவல் வந்தது  என்றும் சீக்கிரமாகவே ஹரிணி கிடைப்பார் எனவும் லதா ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் போலீஸார் மும்பைக்கு விரைந்தனர். அங்கு ஹரிணி கிடைக்காததால் திரிப்போரூருக்கு வந்து தேடி ஹரிணியை மீட்டனர்.
இதுசம்மந்தமாக பிரகாஷ் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அதன் பின்னர் பிரகாஷ் கூறியதாவது : என் நண்பரின் மனைவிக்கு குழந்தை இல்லை. அதனால் தூங்கிக் கொண்டிருந்த ஹரிணியைக் கடத்திக் கொண்டு வந்து ரூ.5 லட்சத்துக்கு நண்பரிடம் விற்று விட்டேன். என்று கூறினார்.
பிரகாஷின் நண்பர் மற்றும்,  அவரது மனைவியை போலீஸார் தேடி வருகின்றனர்.

No comments