Header Ads

test

லசந்த படுகொலை:உத்தரவிட்டது யார்?

ஊடகவியலாளர் லசந்த படுகொலை தொடர்பில் ஏழு ஆண்டுகளாக அவரது கொலை பற்றிய விசாரணைகளை  பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் வேண்டுமென்றே முடக்கியதாக அவரது சகோதரர் லால் விக்கிரமதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார். தொடக்கத்தில் இருந்தே உண்மைக் கொலைகாரர்களை கண்டுகொள்ளாதிருக்க ஏதுவாக  கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே விசாரணைகளை திசைதிருப்ப நான்கு அப்பாவி நபர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது இத்தகைய திசைதிருப்பல்கள் அரங்கேறியுள்ளன.
குற்றவியல் புலனாய்வு திணைக்களத்திலுள்ள ஒரு புதிய குழு 2015ம் ஆண்டில் நியமிக்கப்பட்டதும் லசந்தவின் கொலைக்கு இராணுவ புலனாய்வு பொறுப்பு வகித்ததாகவும், ஐ.ஜி.பி, டிஐஜி மற்றும் பொலிஸ் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு ள்ள தொடர்புகள் பற்றிய புதிய சான்றுகள் வெளிவந்துள்ளன.
இதனிடையே  ஏன் அவர்கள் ஒரு கொலைகாரனை மூடி மறைக்க வேண்டும்? அத்தகைய உத்தரவை யார் கொடுத்தது என்று எனக்கு தெரியுமென அவரது சகோதரர் லால் விக்கிரமதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார். 
கடந்த பத்து வருடங்கள் அரச தலைவர்கள் புலனாய்வாளர்கள்  வெளியே திரிந்தது போன்று இனியும் திரிய அனுமதிக்கப்போகின்றார்களாவென கேள்வி எழுப்பபட்டுள்ளது.
லசந்த இதே நாளன்று கொழும்பில் கோத்தபாயவின் உத்தரவில் படுகொலை செய்யப்பட்டமை தெரிந்ததே.

No comments