Header Ads

test

மூதூர் விபத்தில் ஒருவர் பலி! காவல்துறைக் காவலரன் எரிப்பு!

மூதூர் மட்டகளப்பு வீதி 3சிடி சந்தியில் அமைந்திருக்கும் ( Safe Rest, Mowsooth Hotal ) அருகில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு (11) இரவு 8.20 மணியளவில் இடம்பெற்றதுள்ளது. மணல் ஏற்றிய பாரவூர்த்தி ஒன்று வீதியால் சென்ற துவிச்சக்கர வண்டி ஒன்றின் மீது மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மூதூர் சாபி நகரை பிறப்பிடமாகவும் ஆலிம் நகரில் வசித்தவருமான மஹ்ரூப் மசூம் (வயது-29) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

விபத்தை அடுத்து அப்பகுதியில் ஒன்று கூடியவர்களால் வீதி மறிக்கப்பட்டு ரயர்கள் எரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அருகில் இருந்த காவல்துறைக் காவலரனும் தாக்குதலுக்கு உள்ளாகி எரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறு.

தொடர்ந்து காவல்துறை மக்கள் இணைந்து சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments