Header Ads

test

அமெரிக்காவைப் புரட்டிப் போட்ட மைக்கேல் புயல்! 13 பேர் பலி!

அமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயலில் சிக்கி இதுவரை 13 பேர் இறந்துள்ளதாகவும் புயலால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

முதலில் புளோரிடா மாகாணத்தை தாக்கிய புயல் பின்னர் அலபாமா, ஜார்ஜியா மாகாணங்களையும் தாக்கியது. மணிக்கு 200-ல் இருந்து 240 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது.

அத்துடன் பலத்த மழையும் பெய்தது. சூறாவளியால் கடலிலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. வழக்கத்தை விட 12 அடி உயரத்துக்கு ராட்ச அலைகள் எழுந்து வந்தன. இதனால் பல இடங்களில் நிலப்பரப்புக்குள் தண்ணீர் புகுந்தது.

மழைநீர் மற்றும் கடல் நீரால் புளோரிடா நகரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.

பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள்.



No comments