Video Of Day

Breaking News

கோதாவா அல்லது பஸிலா?

கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தாலும், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து நீண்ட கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பசில் ராஜபக்ஷதான் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்த கருத்துக் குறித்து ஊடகவியலாளர்கள் வினவியதற்கே பசில் ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.
இதுவரையில் எந்தவித தீர்மானமும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எடுக்கப்படவில்லை. எமது கால நேரம் நீதிமன்றங்களில் ஏறி இறங்கியே கழிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் மாத்திரம் மூன்று ராஜபக்ஷாக்கள் புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தரவேண்டியிருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

No comments