Header Ads

test

நாயாறு போகின்றாராம் மைத்திரி!


முல்லைத்தீவு, நாயாறு பகுதிக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 22ம் திகதி பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அரச அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான உடமைகள் நேற்றுமுன்தினம் இரவு தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியில் நேற்று பதற்றம் ஏற்பட்டிருந்தது.

சுதந்திரக்கட்சி சார்பு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சரது உறுதி மொழியினையடுத்தே குழப்ப நிலைதோன்றியுள்ள நிலையில் மைத்திரியின் வருகை அறிவு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவை கூட்டத்தின் போது கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்து பேசியுள்ள இலங்கை ஜனாதிபதி, எதிர்வரும் 22ம் திகதி முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அங்கு இரு தரப்பினருடனும் பேசி, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள சிங்கள மீனவர்கள் கடற்படையின் பாதுகாப்பிலேயே இருக்கின்றனர்.அவர்களது கண்காணிப்பிலேயே அடாவடியில் ஈடுபடுகின்றனர்.சட்டத்தை இயற்றுபவர்களாக அவர்களே உள்ளனர்.அதனை மீறுபவர்களாகவும் அவர்களே உள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்களிற்கு எந்த பாதுகாப்பு இல்லாத நிலையில் சிங்கள மீனவர்களிற்கு கடற்படை மற்றும் இராணுவம் சீருடையிலும் சிவில் உடையிலும் பாதுகாப்பு வழங்கிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

No comments