ரஜீவன்கூல் தாக்கல் செய்த வழக்கு! மணிவண்ணனுக்குப் பிணை!
தேர்தல் காலத்தில் கடமை தொடர்பில் மேற்கொண்ட பணிகளிற்காக அச்சுறுத்தியதாக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் கூல் தாக்கல் செய்த வழக்கில் மணிவண்ணனுக்கு நேற்று பிணை வழங்கப்பட்டது.
உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் ஆணைக்குழு உறுப்பினர் என்ற வகையில் மேற்கொண்ட பணிக்காக தேர்தலின் பின்னர் தாக்குதல் தொடரும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த வி.மணிவண்ணன் அச்சுறுத்தும் வகையிலான கருத்தை வெளயிட்டார் என ஆணைக்குழு உறுப்பினர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தார்.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முறையீட்டின் மீதான வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் இடம்பெற்றது. இதன்போது குறித்த வழக்கினை ஆராய்ந்த நீதிபதி குறித்த வழக்கினை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 14ம் திகதி ஒத்தி வைத்ததோடு, எதிர் மனுதாரரான வி.மணிவண்ணனை 25 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல அனுமதித்தார்.

Post a Comment