Video Of Day

Breaking News

வெடுக்குநாறி மலை:தமிழர்களிற்கு தடை!


நெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது என கூறியிருக்கும் தொல்லியல் திணைக்களம், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என நெடுங்கேணி பொலிஸார் ஊடாக தமிழ் மக்களை எச்சரித்துமுள்ளது. 

வெடுக்குநாறி மலையையும், அங்குள்ள ஆதி ஐயனார் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள காட்டுப்பகுதியை நெடுங்கேணி பிரதேச மக்கள் மிக நீண்டகாலமாக பாதுகாத்து வந்துள்ளனர். குறிப்பாக 2014ம் ஆண்டு வெடுக்குநாறி மலையை உடைத்து கருங்கல் அகழ்வதற்காக சிலர் முயற்சித்தபோது மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து அதனை தடுத்திருந்தார்கள். இந்நிலையில் கடந்த 8ம் திகதி நெடுங்கேணி பிரதேச பொலிஸ் நிலையத்திலிருந்து எமக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் 10ம் திகதி காலை 10மணிக்கு எம்மை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும்  வெடுக்குநாறி மலை ஆலய நிர்வாகத்தினர் வரவேண்டும் எனவும் கூறப் பட்டது. 

அப்போது தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகள் 4பேர் அங்கு வந்திருந்தனர். அவர்கள் 4 பேரும் சிங்கள மொழி பேசுபவர்கள். அவர்கள் பேசுவதை பொலிஸார் எமக்கு மொழி பெயர்த்து கூறியுள்ளனர். 

இதன்போது வெடுக்குநாறி மலை தமது ஆளுகைக்குள் வந்துள்ளதாகவும், வெடுக்குநாறி மலையில் உள்ள ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள காட்டுப்பகுதிக்குள் செல்ல கூடாதெனவும், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. 

No comments