Video Of Day

Breaking News

மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பிணையில் விடுவிப்பு

வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் இன்று (10) மாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

02 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்களின் போராட்ட நடவடிக்கையின் போது கடற்தொழில் நீரியல் வள திணைக்களம் சேதப்படுத்தப்பட்டமை மற்றும் அரச சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு பிற்பகல் 2.45 அளவில் இவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் பொலிஸார் வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரனை முல்லைத்தீவு பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments