Header Ads

test

பொலிசாரும் கொள்ளையர்களே !


சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கொள்ளையர்களான பொலிஸார் லஞ்சம் வாங்குவதை நிறுத்தும்வரை வடமாகாணத்தில் வீதி விபத்துக்களையும், உயிரிழப்புக்களையும் ஒருபோதும் தடுக்க இயலாது. என மாகாணசபை உறுப்பினர் ஜவாஹிர் கூறியுள்ளார்.

வடமாகாணசபையின் 129வது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஏ.9 வீதியில் இரவு நேரங்களில் நிறுத்திவைக்கப்படும் வாகனங்களினால் அதிகளவு வாகன விபத்துக்கள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டு அது தொடர்பில் பிரேரணை ஒன்றினைச் சமர்ப்பித்து உரையாற்றினார்.

மாகாணசபை உறுப்பினர் ஜவாஹீர் அவரது உரைக்குப் பதிலளித்து உரையாற்றுகையில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டு, சீருடை வழங்கப்பட்டுள்ள பொலிஸார் என அழைக்கப்படும் கொள்ளையர்கள் லஞ்சம் வாங்கும் வரை வீதி விபத்துக்களையும், அதனால் உயிரிழப்புக்களையும் தடுக்க இயலாது. வெளிநாட்டில் இருந்து வருகிறவர்களிடம் லஞ்சம் வாங்குவதற்காக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சில ஹயஸ் வாகனங்களில் 5ற்கும் மேற்பட்டவர்கள் பயணிக்கிறார்கள். ஆனால் சட்டத்தின்படி அவர்கள் அவ்வாறு பயணிக்க இயலாது. எனவே அதனை இறுக்கமாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்றார்.

No comments