Video Of Day

Breaking News

பழைய முறையில் தேர்தல்


மாகாண சபைத் தேர்தலை, பழைய முறைமையில் நடத்துவதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தம் தொடர்பான சட்டத் திருத்தத்தின் போது, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவைப்படும் பட்சத்தில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதற்கு ஆதரவாக வாக்களிக்கத் தயாராக இருப்பதாக, மஹிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்ததாகவும், அமைச்சர் ம​னோ மேலும் தெரிவித்துள்ளார்.

No comments