திருப்பதியில் ரணில்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மற்றும் அவருடைய மனைவி மைத்ரி விக்ரமசிங்கே ஆகியோர் இலங்கையில் இருந்து புறப்பட்டு தனி விமானத்தில் நேற்று சென்னை வந்தனர்.
சென்னையில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டரில் மாலை 4.15 மணியளவில் ரேணிகுண்டா வந்தனர். அங்கிருந்து காரில் புறப்பட்டு திருப்பதி வழியாக திருமலையை அடைந்தனர். திருமலையை அடைந்ததும், அங்குள்ள ஸ்ரீகிருஷ்ணா விடுதியில் தங்கி ஓய்வெடுத்தனர்.
முன்னதாக திருமலைக்கு வந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆந்திர மாநில மந்திரி சுஜய்கிருஷ்ணா ரங்காராவ், திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மற்றும் அவருடைய மனைவி மைத்ரி விக்ரமசிங்கே ஆகியோர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்கள். மதியம் 1.15 மணியளவில் திருமலையில் இருந்து புறப்படுகிறார்கள் எனத் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment