இலங்கை

பணகல உபதிஸ்ஸ தேரர் யாழ்.வருகை!

..
மதவேற்றுமைகளை களைந்து இனங்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்க்கும் நோக்குடன் இன்று யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்த பணகல உபதிஸ்ஸ தேரர் இந்து மத தலைவர்கi ளயும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்துள்ளார். 

இன்று காலை யாழ்.மாவட்டத்திற்கு வந்த பணகல உபதிஸ்ஸ தேரர் இன்று மாலை 3.30 ம ணிக்கு நல்லை ஆதீன குரு முதல்வர் மற்றும் சின்மய மிசன் சுவாமிகள் ஆகியோரை சந்தி த்து மத வேற்றுமைகளை களைவதன் ஊடாக இனங்களுக்கிடையில்
ஒற்றுமையை வளர்ப்பது தொடர்பில் பேசியுள்ளதுடன், விரைவில் இந்து மத தலைவர்களை யும், பௌத்த மத தலைவர்களையும் ஒன்றிணைத்து கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 


தொடர்ந்து மாலை 4மணிக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்த ப ணகல உபதிஸ்ஸ தேரர் யாழ்.மாவட்டத்திலும், குறிப்பாக வடமாகாணத்திலும் மக்களுக்குள் ள தேவைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார். 


மேலும் வட்டுக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டுவரும் சிறுவர் பாடசாலை அமைப்பு பணி கள் குறித்தும் ஆராய்ந்தார். 


About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment