ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில், அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள அக்கட்சியின் 16 பேர் கொண்ட அணியிலிருக்கும், நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான, எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா, தயாசிறி ஜயசேகர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து விலகி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 கருத்துகள்:
Post a Comment