உதைபந்தாட்ட கம்பம் சரிந்து கிளிநொச்சியில் மாணவன் பலி
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவன் ஒருவர் நேற்று (07) பிற்பகல் உதைபந்தாட்ட கம்பம் சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
உதயநகர் பகுதியில் உள்ள மைதானத்தில் உதைபந்தாட்ட கம்பம் சரிந்து தலையில் விழுந்ததில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மோகனதாஸ் மதியமுதன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment