வாள்வெட்டு சந்தேக நபர்களைப் பார்க்க யாழ் சிறைக்குச் சென்ற இருவர் கைது
நீதிமன்ற உத்தரவில் சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள, வாள் வெட்டுக் குழுக்களின் சந்தேக நபர்களை யாழ் சிறையில் இன்று பார்க்கச் சென்ற இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் வாள் வெட்டும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கொடிகாமம் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சக நண்பர்களை பார்க்கச் சென்றுள்ளனர். இது தொடர்பான தகவல் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் புலனாய்வு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந் நிலையில் பொலிஸ் புலனாய்வு அதிாரிகள் சிறைச்சாலைக்குள் சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயன்ற போது துரத்திச் சென்று தென்மராட்சி, நாவற்குழிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment