வலி தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட
உடுவில் பிரதேச சபை கீழ் உள்ளடங்குகின்ற உரும்பிராய் விலாத்தியடி பகுதியில் தோட்டத்திற்க்கு செல்லும் பாதையை அகலபடுத்துவதற்க்காக தனியார் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடானது 5தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது இது தொடர்பாக காணி உரிமையாளருக்கு எந்தவித அறிவித்தலும் வழங்காமல் இரவோடுஇரவாக இடம்பெற்றுள்ளது.
அந்த நிகழ்வானது வட்டாரம் 13 பிரதேசசபை உறுப்பினராலும் தொழில் நுட்ப உத்தியோகத்தராலும் நிகழ்த்தப்பட்டது இந்த அடாத்து நடவெடிக்கையின் போது 12 கொங்கிறீட் தூண்கள் உடைக்கப்பட்டுள்ளது 1/2பரப்பு காணி அடார்த்தாக பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பிரதேசசபை உறுப்பினரோ தொழில்நுட்ப உத்தியோகத்தவரோ பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு கொள்ளாததால் பாதிக்கப்பட்டவர் சம்பவம் தொடர்பாக சுண்ணாகம் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாட்டைபதிவு செய்து நீதிமன்ற உதவியை நாடவுள்ளார்.
இணுவில் கிழக்கு பிரதேசத்தில் செப்பனிடப்படவேண்டிய பாதைகள் இருக்கும்போது யாரும் நடமாற்றம் இல்லாத இடத்தில் பாதை அபிவிருத்தி என்று மக்களின் இடங்களை பிடிப்பது மக்கள் மத்தியில் விசணத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்துகள்:
Post a comment