Video Of Day

Breaking News

விபத்தைத் தடுக்க ஏ9 நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தத் தடை கோரும் பிரேரணை முன்வைப்பு

ஏ 9 வீதியில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களாலேயே அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகத்  தெரிவித்து அதனைத் தடுக்க பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.

வடக்குமாகாணசபை அமர்வு தற்போது இடம்பெற்று வருகிறது. இதன்போதே அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானத்தால் இந்த பிரேரணை முன் வைக்கப்பட்டது.

ஏ9 சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களாலேயே அதிகளவான விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் உயிரிழப்புக்களும் அதிகமாகின்றன.  ஆகவே இதனைத் தடை செய்ய வேண்டும்.

No comments