இலங்கை

திருகோமணலையில் காட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை தம்பலகாமம் காவல்நிலைய பிரிவுக்குட்பட்ட சிவத்தப் பாலம் கண்டல் காட்டுப்பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் (8)புதன்கிழமை பகல் நடைபெற்றுள்ளதாகவும், சடலம் யாரு,என்பதை அடையாளம் காண முடியாதுள்ளதாகவும், மரத்தில் கயிற்றினால் கட்டி தூக்கில் தொங்கியுள்ளதாகக் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சடலம் தம்பலாகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலாகாமம் காவல்துறையினர் நடத்திவருகின்றனர்.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment