Video Of Day

Breaking News

அனுராதபுரம் காட்டினில் உள்ளுராட்சி சபை பயிற்சி!


தெரிவு செய்யப்பட்ட வடமாகாணத்திலுள்ள உள்ளுராட்சி உறுப்பினர்களிற்கு நட்சத்திர விடுதிகளில் பயிற்சி அளிக்க அவுஸ்திரேலியா அரசு முன்வந்துள்ளது.எதிர்வரும் 12ம் திகதி முதல் மூன்று தினங்கள் தங்கியிருந்து அவர்கள் பயிற்சிகளை பெற அவுஸ்திரேலிய அரசு வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளது.

அனுராதபுரத்திலுள்ள அமரா காடு விருந்தினர் விடுதியில் நடைபெறும் குறித்த பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ள அழைப்புக்களை வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பிறப்பித்துள்ளார்.

வடமாகாணசபையின் கீழுள்ள கணிசமான உள்ளுராட்சி மன்றங்களில் தவிசாளர்கள் நிர்வாக நடைமுறை தெரியாது திண்டாடிவருகின்றனர்.சபையின் செயலாளர்களது பணிகளை தற்போது தவிசாளர்கள் முன்னெடுத்துவருவதாகவும் இதனால் பெரும்பாலான சபைகளது நிர்வாகங்கள் குழம்பியிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் போதிய நிர்வாக அறிவை ஊட்டவேண்டிய தேவையை கருத்தில் கொண்டு அவுஸ்திரேலிய நிதி உதவியுடன் இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது. 

No comments